தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு: முதல் நாளிலேயே 2908 விண்ணப்பங்கள் பதிவு: வெகுவாக ஆர்வம் காட்டி வரும் மாணவர்கள் - animal husbandry

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பி.டெக் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் தொடங்கப்பட்ட முதல் நாளிலே 2908 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
கால்நடை மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

By

Published : Jun 13, 2023, 6:28 PM IST

சென்னை:தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பி.டெக் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் தொடரப்பட்ட முதல் நாளிலேயே 2908 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 2463 மாணவர்களும், பி.டெக் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு 445 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டுரோடு, தேனி வீரப்பாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என மொத்தம் தமிழ்நாட்டில் 660 விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பிடெக்)40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வளத் தொழில்நுட்ப பட்டபடிப்பில் 20 இடங்களும் நிரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு, https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 12 ஆம் தேதியான நேற்று காலை 10 மணி முதல் ஜூன் 30 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்தப்பின்னர் மாணவர்கள் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பத்தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விண்ணப்பப் பதிவு துவங்கிய முதல் நாளிலேயே கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 2463 மாணவர்களும், பிடெக் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு 445 மாணவர்களும் என மொத்தாமாக 2908 மாணவர்கள் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். மேலும் கால்நடை மருத்துவப்படிப்பிற்கு ஒரே நாளில் 2908 பேர் பதிவு செய்ததுள்ளனர் குறிப்பிடத்தக்கது. விண்ணப்பம் செய்யும் மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் தேதி மற்றும் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அண்ணாமலை வருகைக்கு பிறகே தமிழகத்தில் பாஜக வளர்ச்சி: உமாரதி ஓப்பன் டாக்!

ABOUT THE AUTHOR

...view details