தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் சேர்வதற்கு நாளை (ஆகஸ்ட் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

By

Published : Jul 31, 2022, 4:50 PM IST

சென்னை:மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் 19 அரசு மருத்துவக் கல்லூரியில் 2,536 இடங்களும்; தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 22,200 இடங்கள் என 24 ஆயிரத்து 736 இடங்கள் உள்ளன. டிப்ளமோ நர்சிங் படிப்பில் உள்ள 2,060 இடங்கள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் 8,596 இடங்களும் உள்ளன.

இந்நிலையில், மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழுவின் செயலாளர் சாந்திமலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாட்டைச்சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகளில் 2022-2023ஆம் கல்வி ஆண்டில், பி.பார்ம். (லேட்டரல் என்டிரி) படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பு, போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நர்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியர் பட்டயப்படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகியப் படிப்புகளில் சேர்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில், ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்’ என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருவேற்காடு நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்; சிபிசிஐடிக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details