சென்னை: இது குறித்து பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2022 -23ஆம் கல்வியாண்டில் நோய்ப்பரவியல் (எபிடாமாலஜி) துறையின் கீழ் நடத்தப்படும் படிப்புகளுக்கு 30ஆம் தேதி வரையில் http://www.tnmgrmu.ac.in , epid@tnmgrmu.ac.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது 044-22200713 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பம்... - முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பம்
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்படிப்பிற்கு வரும் 30ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை நோய் பரவியியல் (எம்.எஸ்.சி எபிடாமாலஜி) படிப்பிற்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகள், முதுநிலை கால்நடை அறிவியல், எம்.பிடி, எம்.ஒடி, எம்.பார்ம், எம்.எஸ்சி (லைஃப் சயின்ஸ்) படித்தவர்களும், முதுநிலை அறிவியல் பொது சுகாதாரம் படிப்பிற்கு எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகள், இளநிலை கால்நடை அறிவியல், பி.எஸ்சி நர்சிங், பி.பிடி, பி.பார்ம், பி.எஸ்சி (லைஃப் சயின்ஸ்),பி.இ சிவில் படித்தவர்களும், முதுநிலை பொது சுகாதார இதழியல் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் கூடிய இதழியல் துறையில் அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:டிகிரி முடித்தவர்களுக்கு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!