இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொழில்நுட்ப இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2019-20 கல்வியாண்டில் தகுதி வாய்ந்த பட்டப் படிப்பு முடித்து பணிபுரிபவர்கள் பகுதி நேர பி.இ., பி.டெக்., பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்பு: வரும் 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்! - Anna University
சென்னை: பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்பில் சேர விரும்புபவர்கள் வரும் 6ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, பர்கூர் ஆகிய அரசு பொறியியல் கல்லூரிகள், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் இதனை படிக்கலாம்.
பட்டப் படிப்பினை முடித்து 2 ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தால் மட்டுமே இதற்கு விண்ணப்பக்க முடியும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 6ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்", என கூறப்பட்டுள்ளது.