தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1895 கெளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க வெளியான அறிவிப்பு

அரசு கல்லூரிகளில் தற்காலிகமாக 2022-2023ஆம் கல்வியாண்டிற்கு 1895 கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.

By

Published : Dec 15, 2022, 4:42 PM IST

கெளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம்
கெளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம்

சென்னை:இது குறித்து கல்லூரிக்கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கு முதற்கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1895 பணியிடங்களுக்கு மாணவர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்விச்சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023ஆம் கல்வியாண்டிற்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.

இக்காலிப்பணியிடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித்தகுதி பெற்றுள்ளவர்களிடம் இருந்து பெற்று கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பித்தினை www.tngasa.inஎன்ற இணையதளம் மூலம் வருகின்ற 29ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுநெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000 மதிப்பூதியமாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அரசு வேலைவாய்ப்புகள்..! இதை மிஸ் பண்ணிடாதிங்க..

ABOUT THE AUTHOR

...view details