சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுத் தேதியினை அறிவித்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்ககான கலந்தாய்வு, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல் சுற்றுக்கலந்தாய்வு அக்டோபர் 11ஆம் தேதி 20ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதில் வரும் 28ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும். மாநில அளவில் அக்டோபர் 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில் நவம்பர் 4ஆம் தேதிக்குள் மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும்.