தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 22, 2022, 8:21 PM IST

ETV Bharat / state

'கல்லூரி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்படும்' - அமைச்சர் பொன்முடி!

பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்சிஇ முடிவுகள் வெளியான பிறகு, அடுத்த 5 நாள்களுக்கு நீட்டிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்லூரி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்படும்
கல்லூரி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்படும்

சென்னை: கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பொறியியல் சேர்க்கைக்கு 42ஆயிரத்து 716 பேர் இன்று வரை விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஜூலை கடைசியில் CBSE ரிசல்ட் வரும் என்று சொல்கிறார்கள். இவ்வளவு தாமதமானால் மாணவர் சேர்க்கைக்கு தாமதம் ஏற்படும். CBSE தேர்வு முடிவுகள் வந்த பின்னர் அடுத்த 5 நாள்களுக்கு கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு செய்ய நாள்கள் நீட்டிக்கிறோம். ஆனால் கவுன்சிலிங் தேதி மாற்றப்படாது” என தெரிவித்தார்.

மேலும், “இதற்காகத்தான் நாங்கள் மாநில கொள்கையின் அடிப்படையில் கல்விகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை (ஜூன் 23) முதல் ஜூலை 8ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் காலி பொறியியல் இடங்கள் உள்ளன.

பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க:கிராமப்புற மாணவர்கள் நலனை புறக்கணிக்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்

ABOUT THE AUTHOR

...view details