தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: தனித் தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு விண்ணப்ப தேதி அறிவிப்பு! - தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா

SSLC Practical Exam: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான, செய்முறைத் தேர்விற்க்கு நவம்பர் 6ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதிக்குள் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 6:24 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி நவம்பர் 6 ஆம் தேதியில் இருந்து 10-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "2024 ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் தற்போது தேர்வர்களின் நலன் கருதி அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய நவம்பர் 6 ஆம் தேதி (திங்கள் கிழமை) முதல் 10-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எனவே தேர்வர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதில் தேர்வர்களின் விவரங்களை பூர்த்தி செய்தப் பின்னர், அதனை இரண்டு நகல் எடுத்து நவம்பர் 10-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை நேரில் அணுகி பதிவுக்கட்டணமாக ரூபாய் 125 செலுத்தி, தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது பயிற்சி வகுப்பிற்கான பதிவு மட்டுமே.

2024 ஏப்ரல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளவர்கள், பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாட்களில் சேவை மையத்திற்கு (NODAL CENTRE) சென்று செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்வதற்கான ஒப்புகைச் சீட்டை சமர்ப்பித்து பொதுத்தேர்விற்கு பதிவு செய்து கொள்ளவேண்டும். பின்னர் ஏப்ரல் 2024-ற்கான தேர்வுக்கு வழங்கப்படும் நுழைவுச் சீட்டைக் கொண்டே தேர்வர்கள் செய்முறைத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பத்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரின் அலுவலகங்களை தேர்வர்கள் தொடர்புக் கொள்ளலாம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:52 நாட்கள் சிறைக்குப் பின் விடுதலை! சிறை, வீடு என சந்திரபாபு நாயுடுக்கு உற்சாக வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details