சென்னை: தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், கள் தடை நீக்க கோரியும், பனையேறிகளுக்கு எதிராக நடக்கக்கூடிய மனித உரிமை மீறல் குறித்த குழுவினர் சுமார் 4,000 கிலோமீட்டர் 33 மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த பாண்டியன், ஆறாம் திணை பனையேறி பயணம் சுமார் 4,000 கிலோமீட்டர் நடத்தப்பட்டது. பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் கள், உணவு மருந்தாக உள்ளது. கள் இறக்குவதும் பருகுவதும் உடலுக்கு நல்லது. தமிழ்நாட்டில் கள் இறக்கவும் விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
கள் இறக்கியதற்காக தங்கள் ஊரில் 32 பேர் மீது சாராய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை முடிப்பதற்கு நீதிமன்றத்தை நாட உள்ளோம். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர் போன்ற தயாரிக்கப்படும் கருப்பட்டி கற்கண்டு போன்றவை உடலை குளிர்வித்து தாதுக்களை பெருக்கச் செய்யும். நுங்கு, பனம்பழம், பனை கிழங்கு, உள்ளிட்ட பனை உணவுகளை நேரடியாக மதிப்பு கூட்டியோ உணவாகவோ எடுத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
பனை மரத்தில் இருந்து கள் இறக்கியவுடன் அதில் ஆல்கஹால் 1.5% அளவில் இருக்கும். இரண்டு நாட்கள் புளித்தால் மட்டுமே 13% வரை ஆல்கஹால் அளவு உயரும். கள் மது வகையுடன் ஒப்பிட முடியாது. எனவே தமிழ்நாடு அரசு கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும். கள் விற்பனை குறித்து சரியான புரிதல் அற்றவர்கள் லாப நோக்கில் குத்தகைக்கு எடுத்து கலப்படம் செய்தனர். கலப்படமில்லாத கள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய தாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பனை மரத்திலிருந்து பனங்கள் இறக்க வேண்டுகோள் இதையும் படிங்க:இயற்கை இடர்களால் பாதிக்கப்பட்ட பருவ பயிர்களுக்கு இழப்பீடு...