சென்னை:தலைமைச்செயலகத்தில், அமைச்சர் சக்கரபாணி பொது விநியோகத்திட்டக் கடைகளை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கான செயலியினை அறிமுகம் செய்த பின் செய்தியாளர்களைச்சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'இந்த செயலி மூலம் மாதம்தோறும் நியாவிலைகளை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும். கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை 8 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சுமார் 42,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,12,534 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 2,16,000 மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் 75 விழுக்காடு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் ஓரளவு டெல்டா மாவட்டங்களில் முடிவடைந்துள்ளது.
ஒன்றிய அரசு டெல்டா மாவட்டங்களில் ஆய்வுசெய்து, 22 விழுக்காடு ஈரப்பதத்தை உயர்த்தி தர தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் 17 விழுக்காட்டில் இருந்து 19 விழுக்காடு என்கிற அளவில் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் நாட்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசுக்கு நெல் ஈரப்பதத்தை அதிகரிப்பது தொடர்பாக கோரிக்கை வைக்கப்படும்.