இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் நிலை மோசமாக உள்ளது. டெல்லியில் நடந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து 1,131 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் இதுவரை 515 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, கரோனா வைரஸ் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 616 பேரில் எவருக்கேனும் கரோனா பாதிப்பு இருந்தால், அதை கண்டுபிடித்து மருத்துவம் அளிக்காத பட்சத்தில், அறியாமையால் அவர்களின் உயிருக்கு அவர்களே ஆபத்தை ஏற்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பரவுவதற்கு காரணமாக இருந்து விடக்கூடும். டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே முன்வந்து கரோனா ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்வது அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் மிகுந்த நன்மை பயக்கும்.