சென்னை மெரீனாவை அடுத்துள்ள பட்டினம்பாக்கம் பகுதியில் குடிசை மாற்றுவாரிய கட்டடங்கள் ஏராளமாக உள்ளன.
அங்குள்ள கட்டடங்களில் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் தீயணைப்புத்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு, இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சென்னை மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து ராட்சத ஸ்கை லிப்ட் ஏணிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கட்டடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் மேலும் நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம், பட்டினம்பாக்கம் குடிசை மாற்றுவாரியத்தில் உள்ள 4 அடுக்குமாடிகளின் மேல் பகுதியில் உயரமான ஏணிகளைப் பயன்படுத்தி கிருமி நாசினி தெளித்தனர்.
இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய சைலேந்திர பாபு, "தீயணைப்புத் துறையின் 370 வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. 54 மீட்டர் அடி உயரம் ஸ்கை லிப்ட் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உயரமான கட்டடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: 'கழுகுப்பார்வையில் யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' - இது காவல் துறையின் பிக்பாஸ்!