சென்னை: அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். 2016 ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோல்வி அடைந்தார்.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்கள் இருந்து வந்தன. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஜூலை 22ஆம் தேதி அவருக்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தினர்.
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக 55 விழுக்காடு வரை சொத்து சேர்த்தது தெரியவந்தது. மேலும், கணக்கில் காட்டப்படாத 25 லட்சம் ரூபாய் பணம் உள்பட பல முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக சம்மன்