சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர், டெல்லியைப் போல் சென்னையும் கலவரத்தால் பற்றி எரியும் என்று கூறிய சமூக விரோதிகளை கைது செய்யுமாறுபுகாரளித்தனர்.
பின்னர் பேசிய அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி, "கடந்த 28ஆம் தேதி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தில் பாஜக சார்பில் சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டது. அப்போது, அப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் டெல்லி எரிந்ததுபோல் சென்னை எரிய வேண்டுமா என சென்னையில் வன்முறையைத் தூண்டுவது போல் கோஷங்கள் எழுப்பினர்.