தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன் களப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்த பரிசோதனை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: முன் களப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்த (antibody test ) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையம்
சென்னை மாநகராட்சி ஆணையம்

By

Published : Jul 18, 2020, 12:55 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் அடிப்படையில், தற்போது கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இந்நிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில், சென்னையில் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறிதலுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, சென்னை பெருநகர மாநகராட்சியில் பணிபுரியும் முன் களப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்த (antibody test ) செயப்பப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கும் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன என, அந்தச் செய்திக்குறிப்பில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details