சென்னை:தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 35 ஆயிரத்து 483 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 94 ஆயிரத்து 143ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மீண்டும் புதிதாக ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 425 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் 35ஆயிரத்து 476 நபர்கள், வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஏழு நபர்கள் என 35 ஆயிரத்து 483 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 57 லட்சத்து 54 ஆயிரத்து 662 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 18 லட்சத்து 42 ஆயிரத்து 344 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
இவர்களில் தற்போது மருத்துவமனையில், தனிமைப்படுத்தும் மையங்களில் இரண்டு லட்சத்து 94 ஆயிரத்து 143 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 25 ஆயிரத்து 196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 27 ஆயிரத்து 733ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் 240 நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளில் 182 நோயாளிகள் என 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 468ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து 5,139ஆகப் பதிவாகியுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நோய்த் தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகப் பதிவாகி வருகின்றது. கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் எந்தவித இணைநோயும் இல்லாமல் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை
- சென்னை- 4,78,710
- செங்கல்பட்டு - 1,28,677
- கோயம்புத்தூர்-1,38,861
- திருவள்ளூர் - 92,536
- சேலம்-57,016
- காஞ்சிபுரம் - 57,469
- மதுரை - 55,726
- கடலூர் - 43,547
- திருச்சிராப்பள்ளி - 46,762
- திருப்பூர் - 46,927
- தூத்துக்குடி - 42,292
- திருநெல்வேலி - 39,794
- வேலூர் - 38,712
- தஞ்சாவூர் - 40,123
- ஈரோடு - 43,346
- கன்னியாகுமரி - 40,752
- திருவண்ணாமலை - 35,485
- தேனி - 32,000
- ராணிப்பேட்டை - 30,808
- விருதுநகர் - 31,105
- விழுப்புரம் - 29,310
- கிருஷ்ணகிரி - 28,048
- நாமக்கல் - 25,637
- திண்டுக்கல் - 23,769
- திருவாரூர் - 24,587
- நாகப்பட்டினம் - 23,518
- புதுக்கோட்டை - 19,973
- கள்ளக்குறிச்சி - 18,255
- தென்காசி - 19,341
- திருப்பத்தூர் - 19,122
- நீலகிரி - 15,216
- தர்மபுரி - 15,825
- ராமநாதபுரம் -14,411
- கரூர் - 13,815
- சிவகங்கை -12,665
- அரியலூர் -9,327
- பெரம்பலூர் - 6,370
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்1004
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1075
ரயில் மூலம் வந்தவர்கள்428