சென்னை:தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இந்த சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
மேலும், சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றன. இதன்படி, சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இனி ஆண்டுதோறும் சொத்து வரி உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிக்கையில், "ஒவ்வொரு ஆண்டும் தற்போது உள்ள அடிப்படை தெருக் கட்டணம் 6 விழுக்காடு அல்லது ஐந்து ஆண்டுகள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம், இவற்றில் எது அதிகமாக உள்ளதோ அதன் அடிப்படையில் உயர்த்தப்படும்.