தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

110-விதியின் கீழ் விவசாயிகளுக்காக முதலமைச்சர் அறிவிப்புகள் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்

சென்னை: டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட விவசாயிகளின் நலன்களை அதிகரிப்பதற்காக 19 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்.

cm palanisamy
cm palanisamy

By

Published : Mar 24, 2020, 3:30 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேளாண்மைத்துறை குறித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்

  • காவேரி டெல்டா மாவட்டங்களில் 44, மற்ற மாவட்டங்களில் 81 என மொத்தம் 125 துணை வேளாண் விரிவாக்க மையங்கள், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடப்பாண்டில் கட்டப்படும்.
  • காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, திருப்பூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் திட உயிர்உர உற்பத்தி மையங்கள், 12.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்கி, திரவ உயிர்உர உற்பத்தி மையங்களாக மாற்றப்படும்.
  • பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள கடலூர், புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை வழங்க, புதிய விதை
  • சுத்திகரிப்பு நிலையங்களின் தரத்தை உயர்த்தி நவீனப்படுத்த 3 கோடியே 91 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
  • நெல் ரகங்களின் பாதுகாவலர் மறைந்த நெல் ஜெயராமன் நினைவைப் போற்றும் வகையில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் "பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்" அமைக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் காய்கறி மற்றும் பழங்கள் அதிகம் சாகுபடி செய்யும் 250 வட்டாரங்களில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாற்றங்கால் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக நடப்பாண்டில் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வெற்றிலை பயிருக்கான சிறப்பு மையம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
  • நடப்பாண்டில், இயற்கைப் பண்ணை முறையில் கீரை வகைகள், தக்காளி, கத்திரி, வெண்டை, முட்டைகோஸ் மற்றும் காலிப்ளவர் போன்ற காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்யும் முறையினை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி ஊக்குவிக்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
  • விவசாயிகளின் விளை பொருள்களுக்கு சரியான விலை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், திருவாரூர் மாவட்டம், மூங்கில்குடி கிராமத்தில் நன்னிலம் அரசு விதைப் பண்ணையில், 10 ஏக்கர் பரப்பளவில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரிசி சார்ந்த உணவு பதப்படுத்தும் தொகுப்பு அமைக்கப்படும்.
  • தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிதம்பரம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் வணிக மாதிரி அங்காடிகள் அமைக்கப்படும்.
  • மின்னணு வர்த்தகத்தின் பயன்களை விவசாயிகள் பெறுவதற்கும், அவர்களின் விளைபொருட்களை தேசிய அளவில் வர்த்தகம் செய்ய உகந்த சூழ்நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கவும், 50 கோடி ரூபாய் செலவில் 100 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், மின்னணு வர்த்தக தளம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • 2020-2021ஆம் ஆண்டில் மேலும் 100 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்க மாநில அரசின் சார்பில் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
  • காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள விவாசாயிகளுக்கு தேவையான அதிக சக்தி கொண்ட 20 டிராக்டர்கள், டிராக்டரால் இயங்கக்கூடிய 10 நிலம் சமன் செய்யும் கருவிகள், 10 ஹேரேக் நெல் அறுவடை இயந்திரங்கள் ஆகியவை 7 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்படும்.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 50ஆவது ஆண்டு நிறைவடைந்த சிறப்பைப் போற்றிடும் வகையில், பழமையான கட்டடங்களை புதுப்பிக்கவும், நினைவு மண்டபம் கட்டவும், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 29 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்
  • பல்வேறு நாடுகள் பின்பற்றி வரும் தொழில் நுட்பங்களை நமது விவசாயிகள் காணவும், அவற்றை கடைபிடிக்கவும் ஏதுவாக, வெளிநாடுகளுக்கு அழைத்துத் செல்ல, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
  • நாகப்பட்டினம் மாவட்டம், வடுவாஞ்சேரி கிராமத்தில், புதிய வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஒன்று 200 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் உருவாக்கப்படும். இதற்காக நடப்பாண்டில் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details