எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?- அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் - எஸ்.ஐ தேர்வு
தமிழ்நாடு காவல் துறையில் 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று (08.03.2022) முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைய முகவரி உள்ளிட்டவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?- அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
By
Published : Mar 8, 2022, 8:58 PM IST
சென்னை:தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியிடம் புதிதாகப் பணியில் சேர்வோருக்கு மிகவும் கவுரவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதல் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தால் கிட்டத்தட்ட பதவிக்காலத்தின் இறுதியில் தான் உதவி ஆய்வாளர் அந்தஸ்துக்கு சீரான பணி உயர்வின் மூலம் வந்தடைய முடியும்.
ஆனால், உதவி ஆய்வாளராகப் பணியில் சேருபவர் கிட்டத்தட்ட ஐ.பி.எஸ். மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் குரூப் 1 அதிகாரிகளின் துவக்க நிலை பதவிகளை, பணிக்காலத்தின் இறுதியில் பெற முடியும். இதனால் எஸ்.ஐ. பணியிடம் குறித்த அறிவிப்பை இளைஞர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான எஸ்.ஐ. தேர்வுக்கான அறிவிப்பாணையைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பம் இன்று(மார்ச்.8) துவங்கியுள்ளது.
காலியிடங்கள் எத்தனை?
பணியிடம்
பொதுப்பிரிவு/ஆண்கள்
பெண்கள்/ மூன்றாம் பாலினம்
மொத்தம்
தாலுகா உதவி ஆய்வாளர்
279
120
399
ஆயுதப்படை உதவி ஆய்வாளர்
32
13
45
மொத்த பணியிடங்கள்
311
133
444
தமிழ் மொழி தேர்வு கட்டாயம்
அறிவிப்பாணை வெளியிட்ட நாளான 08.03.2022 அன்று பல்கலைக் கழக மானியக்குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நடப்பாண்டில் உதவி ஆய்வாளராக தேர்வாக தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
100 மதிப்பெண்களுக்கு இடம்பெறும் கொள்குறிவகை வினாக்களை கொண்ட தேர்வில், குறைந்தபட்சம் 40 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே எழுத்துத்தேர்வின் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.