தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி , ஜவஹர்லால் நேரு , அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் ஆண்டுதோறும் அவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சு போட்டிகள் நடத்திப் பரிசு , பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் ' என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி "மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் நாளில் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டித் தலைப்புகள் போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்படும். . போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி கல்லூரி மாணவர்களை அந்தந்தக் கல்லூரி முதல்வரே 2 பேர் வீதம் தேர்வு செய்து போட்டிக்கு அனுப்ப வேண்டும்.