தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 காவல் துறை அலுவலர்களுக்கு சிறப்புப்பதக்கங்கள் அறிவிப்பு - தமிழ்நாடு காவல்துறை

2022ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அலுவலர்களுக்கு சிறப்புப்பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு

By

Published : Aug 14, 2022, 12:07 PM IST

Updated : Aug 14, 2022, 12:32 PM IST

சென்னை: பொதுமக்கள் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகச்செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அலுவலர்களுக்கு 2022ஆம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு, அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச்சேவைக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும். பதக்கம் பெறவுள்ள காவல்துறை அலுவலர்களின் பெயர்கள்...

  • பிரேம்ஆனந்த் சின்ஹா, கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (தெற்கு), சென்னை பெருநகர காவல்.
  • அம்பேத்கர், காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, கடலூர்.
  • சிவராமன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், அடையாறு போக்குவரத்து காவல் நிலையம், சென்னை பெருநகர காவல்
  • பழனியாண்டி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலையம், மதுரை மாநகரம்.
  • குமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலையம், தாம்பரம் காவல் ஆணையரகம்.

இதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததைப் பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அலுவலர்கள் 2022ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:

1) ஸ்டாலின், காவல்துறை துணை ஆணையாளர், தலைமையிடம், மதுரை மாநகரம்,
2) கிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர்,ஒருங்கிணைந்த குற்ற அலகு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை, சேலம் மாநகரம்
3) பிருந்தா, காவல் ஆய்வாளர், ரோஷனை காவல் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.
4) பிரபா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாமக்கல் மாவட்டம்.
5) சீனிவாசன், காவல் ஆய்வாளர், ஆர்- 2 கோடம்பாக்கம் காவல் நிலையம், சென்னை மாநகரக் காவல்.
6) சுமதி, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம்.
7) நாகலெட்சுமி, காவல் ஆய்வாளர், கரியாப்பட்டினம் காவல் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம்.
8) துளசிதாஸ், காவல் உதவி ஆய்வாளர், பூவிருந்தவல்லி போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு, சென்னை பெருநகர காவல்.
9) பார்த்தசாரதி, காவல் உதவி ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, ஒருங்கிணைந்த குற்ற அலகு - 1, சென்னை.
10) இளையராஜா, காவல் உதவி ஆய்வாளர், அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சென்னை.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீரமங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்... முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

Last Updated : Aug 14, 2022, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details