இது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழ்நாட்டைச் சார்ந்த மாரியப்பன் தங்கவேல் இந்தியாவில் விளையாட்டிற்கு அளிக்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கெல் ரத்னா விருதுக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். அவரை நினைத்துப் பெருமைப் படுகிறோம். இது இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த மாரியப்பன் தங்கவேலு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றார். இவரின் மகத்தான சாதனையை அங்கீகரித்து மத்திய அரசு விளையாட்டிற்கான பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதை அவருக்கு அறிவித்தது. மேலும் அதே ஆண்டில் அர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது.