தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - மெட்ரிக்குலேசன் இயக்குனரகம் முக்கிய அறிவிப்பு - சென்னை

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர்களை சேர்ப்பதற்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தனியார் பள்ளிகள்

By

Published : Mar 27, 2019, 9:30 PM IST

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 விழுக்காடு, மாணவர்களை சேர்ப்பதற்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரையில்இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் 2018-19ஆம் கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் 2019-20 ஆம் கல்வியாண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது,

தொடக்கநிலை வகுப்புகளின் (எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பு) பள்ளிகளில்மொத்தமுள்ள 25 விழுக்காடு இடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்புவதற்குபள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். இதற்கு பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும்.

பெற்றோர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் போன்றவற்றில் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒவ்வொருபள்ளியும் நுழைவு நிலை வகுப்பு மற்றும் அந்த வகுப்பில் சேர்க்கைக்கான இலக்கை நிர்ணயம் செய்து மாவட்டக்குழுவிடம் ஏப்ரல் இரண்டாம் தேதி அளிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு தேவையான சாதிசான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அந்த துறையிடம் இருந்து பெற்று தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details