சென்னையில், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக ஒருமனதாக மூத்த இயக்குநர் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் இல்லாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இதற்கு சில இயக்குநர் எதிர்ப்பு தெரிவித்ததால் தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்தார்.
பாரதிராஜா ராஜினாமா; இயக்குநர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு! - announcement
சென்னை: தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா ராஜினாமா செய்ததை அடுத்து தமிழ்நாடு இயக்குநர் சங்க தேர்தல் வரும் ஜூலை 21 ஆம் தேதி நடக்க இருப்பதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கமலா திரையரங்கில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இயக்குனர்பாரதிராஜா, விக்ரமன், ஆர்.கே செல்வமணி, எஸ்.பி. ஜனநாதன், கரு.பழனியப்பன் உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பாரதிராஜா குறித்து எஸ்.பி. ஜனநாதன், கரு. பழனியப்பன் ஆகியோர் பேசிய சர்ச்சை கருத்தால், உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.செல்வமணி, "கடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தேர்தல்
நடத்தப்பட உள்ளது. தலைவர் பதவிக்கும் சேர்த்தும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஜூலை 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். தன்னுடைய பணிச்சுமை காரணமாக தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்துள்ளார்" என்றார்.