தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கி வருகிறது.
அவ்வகையில் வரும் 2020ஆம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படும் அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.