தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி.சி. இளங்கோவன் தலைமையில் அமைச்சர் அன்பில் மகேஷிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அம்மனுவில், "கரோனா தொற்று காரணமாக 2020 மார்ச் 24ஆம் தேதிமுதல் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் முழுமையாக இயங்க முடியத நிலையில் அரசின் உத்தரவுகளை முழுமையாகப் பின்பற்றிவருகிறோம்.
எந்தச் சூழ்நிலையிலும் மாற்றுச் சான்றிதழ்கள் இல்லாமல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படக் கூடாது.
இதுபோன்று நடந்தால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அதனைத் தடுப்பதற்குரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 2020-21ஆம் கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட சுமார் 436 கோடி இலவச கட்டடாயக் கல்வி உரிமை கட்டணங்களை விரைவாக வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டி.சி. இளங்கோவன் மனு தற்காலிக அங்கீகாரம் முடிந்த அனைத்துப் பள்ளிகளுக்கும் தற்பொழுது உள்ள கரோனா சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாகத் தொடர் அங்கீகாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு எந்தவித சான்றுகளும் நிபந்தனைகளும் இல்லாமல் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்குத் தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை ஆண்டிற்கு 30 விழுக்காடு உயர்த்தி 2021-22, 2022-23, 2023-24 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு நிர்ணயிக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களுடைய குறைகளைக் களையவும், அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் தனியாக வாரியம் அமைக்க வேண்டும்.
10, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவுகளை தனியார் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் தனித்தனியாக வெளியிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:நேரடியாக மக்களிடமிருந்து மனுக்களை பெற்ற முதலமைச்சர்