சென்னைதியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கோவை முற்றிலுமாக தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் முழுமையாக கொங்கு பகுதிகளில் ஊடுருவி உள்ளனர்.
விபத்தில் பலியான ஜமேஷா முபீன் 21ஆம் தேதி தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேடஸ்ஸில் (என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரிய வரும் நேரத்தில், நான் செய்த தவறை மன்னித்து விடுங்கள், என்னுடைய குற்றங்களை மறந்து விடுங்கள், என்னுடைய இறுதி சடங்கில் பங்கேருங்கள்) என பதிவு செய்துள்ளார். இது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தாக்குதலுக்கு முன்பாக பயன்படுத்தக்கூடிய ஒரு வாக்கியம் இது காவல்துறையிடம் உள்ளது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பின் தொடர்புடைய விசாரணையில் ஜமேசா மொபின் இடமும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளனர். கோவையில் நடந்த கார் வெடி விபத்து தற்கொலை தாக்குதலுக்கான ஒரு முயற்சிதான். நல்ல வேளையாக அந்த சம்பவம் நடைபெறவில்லை. அப்படி நடந்து இருந்தால் ஆட்சி கலைக்கப்பட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கும்.
கோவையில் நடைபெற்ற வெடி விபத்து தற்கொலை தாக்குதல் தான் என காவல்துறை தயங்குவது ஏன்?. இந்த விவகாரத்தில் தற்போது 5 நபர்களை கைது செய்துள்ள நிலையில் எதற்காக கைது செய்துள்ளோம் எந்த பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என எந்த விவரங்களும் அதில் குறிப்பிடவில்லை.