தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்புகளுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்... - bjp personalities

பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் நிகழ்ந்து வரும் தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்புகளுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்புகளுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்
தொடர் பெட்ரோல் குண்டு வெடிப்புகளுக்கு அண்ணாமலை கடும் கண்டனம்

By

Published : Sep 25, 2022, 8:49 AM IST

சென்னைசேலையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் சிறப்புக்கு காரணம் வெளிநாட்டு நட்புறவு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களே என்பதை வலியுறுத்தி எழுத்தாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் பேசினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “இரண்டு நாட்களுக்கு முன்பு என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை, பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்களிடத்தில் சோதனையை நடத்தினர்.

இந்தியா முழுவதும் 105 பேர் கைது செய்யபட்டனர். இந்த சோதனையில் தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த இரு நாட்களாக பாஜக தொண்டர்கள், சொத்துகள் மற்றும் அலுவலகம் மீது பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கோவையில் 12 இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் 1 இடத்தில், செங்கல்பட்டு 1 இடத்தில் என தமிழ்நாடு முழுவதும் 19 இடத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முண்ணனி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல் துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? முதலமைச்சர் அமைதி பூங்கா என்று சொல்கிறார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நம் தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் களத்திற்கு வந்தால் என்ன ஆகும்? இதனை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பாஜக அமைதியை விரும்பக்கூடிய கட்சி. மாநில டிஜிபியை சந்தித்து பாதுகாப்புக்கோரி மனு அளித்து கேட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

அமித்ஷாக்கு கூட கடிதம் எழுதியிருக்கிறேன். பிரிவினைவாதிகளை அடக்க வேண்டும். பொறுமையாக இருக்கிறோம். காவல்துறை திமுக எம்பி ஆ.ராசா பேசியதற்கு போராட்டம் நடத்திய 100 பாஜக தொண்டர்களை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு முழுவதும் 19 இடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஒருவரை கூட கைது செய்யவில்லை.

தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மூன்று நாட்களாக ஒரு கண்டன அறிக்கை கூட கிடையாது. திமுக ஆட்சி ஒரு தலை பட்சமாக செல்கிறது. அமைதியின் முறையில் சென்று கொண்டிருக்கிறோம். 26 ஆம் தேதி மாபெரும் அறப்போராட்டம் கோவையில் நடைபெறும்.

தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா எய்ம்ஸ் குறித்து பேசியிருந்ததை வழக்கம்போல தமிழ்நாடு எம்பிக்களின் முதல் வேலை, தமிழ்நாட்டில் எந்த வேலையும் நடக்க கூடாது என முனைப்பு காட்டுவார்கள். மக்களை முட்டாளாக்க நினைப்பார்கள். 2018 டிசம்பர், ஜப்பான் நாட்டை சார்ந்த ஜக்கா நிறுவனத்தோடு கைகோர்த்து, அந்த நிறுவனம் எய்ம்ஸ் கட்ட உதவி செய்யும் விதமாக 2021 மார்ச் மாதம் கையெழுத்தானது.

மத்திய அரசு கேபினட் அப்ரூவலில் இருந்த 53%, அதாவது 1,974 கோடியாக உயர்த்தப்பட்டது. 164 கோடி ரூபாயில் இரண்டாவது அப்ரூவல் வழங்கப்பட்டது. மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணம் 95% கொடுக்கப்பட்டுவிட்டது. அக்டோபர் 2026 அன்று, எய்ம்ஸ் முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்.

பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த நபர்களை மத்திய அரசும், மாநில அரசும் இந்திய இறையாண்மையை காக்கும் வகையில் கைது செய்திருக்கிறார்கள். தாம்பரம் திமுக எம்எல்ஏ ராஜா, தனியார் தொழிற்சாலைக்குச் சென்று மிரட்டியது குறித்து கேட்டதற்கு, ஜே.பி நட்டா திமுக குறித்து சொன்னார்.

அப்போது குடும்ப கட்சி, பணம் சுருட்டுவது, கட்டப்பஞ்சாயத்து இதுதான் திமுக என நட்டா பேசினார். பத்திரிகையில் செய்தி வெளியானதால் வழக்குப்பதிவு செய்தார்கள். கைது நடவடிக்கை இருக்காது என்றார். அவரை காப்பாற்றத்தான் பார்ப்பார்கள் என்று நட்டா பேசினார்” என்றார்.

இதையும் படிங்க:‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 95% நிதி ஒதுக்கியதாக கூறினேன்’ - ஜே.பி.நட்டா விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details