சென்னை: விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த பெட்ரோல். டீசல் விலை குறைப்பை நிறைவேற்றாததால் அதிமுகவினர் இன்று (ஜூலை 28) மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த எந்த ஒரு வாக்குறுதிகளையும் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்து 75 நாள்கள் கடந்தும் முழுமையாக ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.
பெட்ரோல், டீசல் விலையில் இருந்து நீட் தேர்வு வரை அனைத்தையும் கூறி விட்டு தற்போது அதற்கெல்லாம் ஒரு காரணத்தைச் சொல்லி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் எப்போதும் தேர்தல் வாக்குறுதியை எதிர்பார்த்து ஒரு பெரிய வாக்கு வங்கி உள்ளது. இதனால் பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சிக்கு வந்துள்ளார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.