தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்; ஆளுநரை சந்திக்க பாஜக திட்டம்! - chennai

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளிவந்த ஆடியோ குறித்து அவர் மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai said BJP is planning to meet the Governor regarding the Finance Minister Palanivel Thiagarajan audio issue
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் சம்பந்தமாக பாஜகவினர் ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 23, 2023, 11:04 AM IST

சென்னை: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பைல்ஸ் என்னும் பெயரில் திமுகவின் முக்கிய புள்ளிகளின் சொத்து விவரங்களை வெளியிட்டிருந்தார். அதனையடுத்து திமுகவினர் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவும், நஷ்ட ஈடு வழங்கவும் நோட்டீஸ் அளித்திருந்தனர். இந்த சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அண்ணாமலை ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும் அமைச்சருமான உதயநிதியும், முதலமைச்சரின் மருமகன் சபரீசனும் கையில் வைத்திருக்கும் பணம் மட்டும் ரூ.30,000 கோடி இருக்கும் என தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.

திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டதற்கு நிதித்துறை அமைச்சரின் ஆடியோ வலு சேர்த்துள்ளதாகவும், அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத் தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி, தமிழக பாஜக தலைவர்கள் குழு ஒன்று, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று(ஏப்.23) சந்திக்கவுள்ளது.

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இந்த ஒலி நாடா பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால், அவர் அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதைப் போல ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன். என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார். தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்க வேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். இரண்டு ஒலி நாடாக்களின் உண்மைத் தன்மையை, நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும்.

காலங்காலமாக பதவிகளை எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு, தனது கட்சித் தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்ட வைத்து ஏமாற்றுவது போல, இது அத்தனை எளிதானதல்ல என்பதை தமிழக நிதியமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால் நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு, நம் தமிழக மக்கள் ஒன்றும் திமுகவினர் அல்ல. அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் தமிழக நிதியமைச்சரை மிக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அமைச்சர் தங்கம் தென்னரசு.. திடீர் பயணத்தின் காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details