தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

DMK Files 3: ஆ.ராசா - ஜாபர் சேட் உரையாடல்.. அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ! - ஜாபர் சேட்

BJP state president Annamalai: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக பைல்ஸ் 3 என்னும் பெயரில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் உடன் பேசும் ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

Annamalai released the audio of MP A Raja talking to former intelligence chief in DMK files part 3
அண்ணாமலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 11:02 PM IST

Updated : Jan 17, 2024, 11:41 PM IST

சென்னை:பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக பைல்ஸ் (DMK Files) என்னும் பெயரில் திமுக பிரமுகர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதில் திமுக அமைச்சர் துரைமுருகன், எம்பி ஜெகத்ரட்சகன், முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.

இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜூலை மாதம் அடுத்ததாக திமுக பைல்ஸ் 2யை வெளியிட்டார். அதில் டெண்டரில் நடந்த முறைகேடுகள் இடம்பெற்றிருந்தது. அண்ணாமலை திமுக பைல்ஸ் வெளியிட்டதை அடுத்து திமுகவினர் அவர் மீது வழக்கும் தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி அண்ணாமலை திமுக பைல்ஸ் 3யை வெளியிட்டார்.

பொங்கலுக்கு முந்தைய தினத்தில் அண்ணாமலை அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் அந்த ஆடியோவை வெளியிட்டிருந்தார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடன் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் பேசும் ஆடியோவை வெளியிட்டு, “2004 - 2014இல் வேறு பெயரைக் கொண்டிருந்த இண்டியா கூட்டணியின் ஊழலை வெளிப்படுத்தும் பல ஒலி நாடாக்களில் இதுவும் ஒன்று.

2ஜி விசாரணையின் போது, திமுக & காங்கிரஸ் சிபிஐ ரெய்டுகளின் நேரத்தை முடிவு செய்து, விசாரணையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் வேண்டுமென்றே செய்திகளைக் கையாண்டது மற்றும் அவர்களின் வசதிக்கேற்ப செயல்முறையைச் சரிசெய்தது. மேலும் வெளியிடப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (ஜன.17) நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் உடன் பேசும் ஆடியோவை வெளியிட்டு, “2ஜி விசாரணையின் போது சிபிஐ விசாரணையை திமுக எப்படிக் கையாண்டது என்பது பற்றிய தொடர்ச்சி. 2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளி ஆ.ராசா, முன்னாள் உளவுத்துறைத் தலைவர் ஜாபர் சேட் இடையிலான உரையாடல். ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2ஜி விசாரணையை இப்படித்தான் நடத்தியது. இது இத்துடன் முடிவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகக்கோரி ஜி.எஸ்.டி துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதம்!

Last Updated : Jan 17, 2024, 11:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details