சென்னை:கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட ராஜசேகரன் என்பவர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், உதவி ஆய்வாளர் உள்பட ஐந்து காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, 'தமிழ்நாட்டில் அரசு இயங்குகிறதா?’ என கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், 'இரண்டு நாட்களில், இரண்டு லாக்-அப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்குச்சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை. கடந்த ஓராண்டில் ஏழு லாக்-அப் மரணங்கள். காவல் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழ்நாட்டில் அரசு இயங்குகிறதா???' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:விசாரணைக் கைதி மரணம் - காவலர்களிடம் நீதிபதி விசாரணை