சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம் எல்) ஆகிய கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சிபிஐ(எம்.எல்.) மாநிலச் செயலாளர் நடராஜன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், ’அண்டை நாடான இலங்கையில் எப்படி விலைவாசி உயர்ந்து உள்ளதோ அதே போன்று தான் இந்தியாவிலும் உயர்ந்துள்ளது. மோடி அரசின் நடவடிக்கைகளால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
அண்ணாமலை செங்கோட்டைக்குப் போகலாம்:மேலும் பெட்ரோல் , டீசல் விலையை மாநில அரசு குறைக்க வேண்டும். இல்லையெனில் அண்ணாமாலை கோட்டையை முற்றுகையிட போவதாக கூறுகிறார். என்னைப் பொறுத்தவரையில் அண்ணாமலை கோட்டைக்குப் போவதைவிட செங்கோட்டைக்கு போவது நல்லது. அதற்கான பாதையை தான் சொல்லத் தயார்’ கூறினார்.