சென்னை :பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் பாஜகவின் மாத இதழ் பத்திரிகையான ஒரே நாடு, பாஜக அறிவுசார் பிரிவு சார்பாக சிறப்பு மலர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக அரசின் ஏழு ஆண்டு சாதனைகளை ஆவணப்படுத்தும் விதமாக சிறப்பு மலரை மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதனை பாஜக உறுப்பினரும் நடிகர் சிவாஜி கணேசன் மகனுமான ராம்குமார் பெற்றுக்கொண்டார்,
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பல ஆண்டுகள் பிரதமராக இருக்கப் போகும் மோடி இருக்கும்போதே தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி சாதனை மலர் புத்தகம் வீட்டில் பாதுகாப்பாக வைக்க வேண்டிய புத்தகம் தான். அறிவுசார்ந்த புத்தகங்களை மக்களிடத்தில் முன் வைக்க வேண்டும்.