தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘எங்களது பாதயாத்திரை முதலமைச்சரையே கலங்கடிக்க செய்துள்ளது’ - அண்ணாமலை விமர்சனம்! - Amit Shah to inaugurate Annamalai Yatra

அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல பாவ யாத்திரை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புலம்பும் அளவுக்கு இந்த யாத்திரை வெகுவாகக் கலங்கடித்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 29, 2023, 9:29 PM IST

சென்னை:ராமேஸ்வரத்தில் “என் மண் என்” மக்கள் என்ற அண்ணாமலையின் பாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று (ஜூலை 29) திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அமித்ஷா தொடங்கி வைத்தது பாத யாத்திரை அல்ல, அது பாவ யாத்திரை. தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தவே பாதயாத்திரை நடத்தப்படுகிறது. மணிப்பூருக்குச் சென்று ஏன் அமைதி யாத்திரையை தொடங்கி வைக்கவில்லை?" என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், அமித்ஷா தொடங்கி வைத்த யாத்திரை பாவயாத்திரை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அண்ணாமலை பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த என் மண் என் மக்கள் நடைபயணம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாடு மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் நிதிகளைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது. தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், தமிழ்நாடு மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர். திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.

2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார். பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:‘உங்கள் மகன் பிசிசிஐ தலைவர் ஆனது எப்படி?’ - அமித்ஷாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த உதயநிதி!

ABOUT THE AUTHOR

...view details