தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்கிறார் அண்ணாமலை?

ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகார் அளிக்க அளிக்கிறார்.

Annamalai going to Delhi to meet Amit Shah
Annamalai going to Delhi to meet Amit Shah

By

Published : Feb 22, 2023, 1:01 PM IST

சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரருக்கும் திமுக கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு சென்னை சேப்பாக்கத்தில் பாஜக சார்பில் நேற்று(பிப்.21) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவ வீரர் பாண்டியனின், தங்களுக்கும் குண்டு வைக்க தெரியும் என்ற பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த குடும்பத்திற்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர்.
இதுதொடர்பாக நேற்று(பிப்.21) இரவு முன்னாள் ராணுவ வீரர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆளுநரை சந்தித்து ராணுவ வீரர் மரணம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து புகார் மனு அளித்தார். அதற்கு, "ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம்.பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டாக வேதனையைப் பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம்" என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று(பிப்.22) உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்திக்க டெல்லி செல்கிறார். தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ராணுவ வீரர் மரணம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அமித்ஷாவிடம் மனு அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details