தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு: தன் மீது தவறில்லை என அண்ணாமலை மறுப்பு! - DMK Files

DMK Files case: திமுக ஃபைல்ஸ் குறித்த தன்னுடைய கருத்தில் எந்த தவறும் இல்லை என்று கூறி, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 6:52 AM IST

சென்னை: திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துகளை அண்ணாமலை தெரிவித்துள்ளதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள அண்ணாமலையை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், அண்ணாமலை இரண்டாவது முறையாக ஆஜராகி நேற்று (அக்.5) இருந்த நிலையில், அவரிடம் டி.ஆர்.பாலுவின் வழக்கு குறித்து நீதிபதி அனிதா ஆனந்த் கேள்வி எழுப்பினார். அதற்கு அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ் குறித்த தனது கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், தன் மீதும் எந்த தவறும் இல்லை என்றும் கூறி, பாலு கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இதையடுத்து, அவதூறு வழக்கில் விசாரணையை தொடங்குவதற்காக, வழக்கை டிசம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினமும் அண்ணாமலை ஆஜராக உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கோவை குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளிகளின் ஜாமீன் மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details