திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உடல்நலம் குறித்து நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ஆற்காடு வீராசாமியின் மகனான கலாநிதி வீராசாமி, " என் தந்தை கொள்ளு பேரனின் பிறந்த நாள் விழாவில் கடந்த 10ஆம் தேதி கலந்து கொண்டார். நல்ல உடல்நலத்துடன் உள்ள அவரை , இறந்துவிட்டதாக கூறியதை வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.