சென்னை: அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அண்ணாமலை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”திமுக அரசானது புனித நாளாகக் கருதப்படும் வெள்ளி, விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் திருக்கோயில்களை மூடுகிறது.
அதை மாற்றி வாரத்தின் எல்லா நாள்களிலும் திருக்கோயில்களைத் திறக்க வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளானது செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிப்போனது.
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், உணவகங்கள், சாலைப் போக்குவரத்து என எல்லாமே வழக்கம்போல் இயங்கும்போது, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் வார நாள்களில் மூடுவது வஞ்சக எண்ணமே ஆகும்.
பக்தர்கள் கூட்டத்தை மூன்று நாள்கள் தடுத்து, நான்காவது நாள் அதிக கூட்டத்தை வேகமாக அனுமதிப்பதன் மூலம் நோய்ப் பரவுவதைத் தடுப்பதாகக் கூறுவதை யாரும் ஏற்க முடியாது.