பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
#ANNA111 - முதலமைச்சர், துணை முதலமைச்சர் அண்ணா சிலைக்கு மரியாதை - tamilnadu Chief Minister edappadi palanisamy courtesy of Anna idol
#ANNA111 சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.
![#ANNA111 - முதலமைச்சர், துணை முதலமைச்சர் அண்ணா சிலைக்கு மரியாதை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4445304-thumbnail-3x2-che.jpg)
tamilnadu Chief Minister edappadi palanisamy courtesy of Anna idol
இதில், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், வேலுமணி, ஓ.எஸ். மணியன், மக்களவை உறுப்பினர் ஓ.ப. ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
#ANNA111 முதலமைச்சர் மரியாதை
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்தும் முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரிலும் பேனர்கள் அமைக்கப்படாமல் இந்த பிறந்தநாள் விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.