இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம், அதன் வளாகக் கல்லூரிகளுக்கும் உறுப்புக் கல்லூரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ”அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சில உறுப்புக் கல்லூரிகள், இணைப்பு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சமூக வலைதளங்களில் களங்கம் ஏற்படுத்தக் கூடிய பதிவுகளைப் பதிவிட்டுவருகின்றனர்.
களங்கம் ஏற்படுத்துவேர் மீது நடவடிக்கை - எச்சரிக்கும் அண்ணா பல்கலைக்கழகம் - அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம்
சென்னை: பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Anna University warns of action against stigmatizers
பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் இத்தகைய நபர்கள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க தயங்காது. அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறோம்” என்று கூறியுள்ளது.