தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மீது புகார்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

anna-university

By

Published : Jun 7, 2019, 1:49 PM IST

தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் 92 தனியார் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட வேண்டும். அக்கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டால்தான் மாணவர்கள் அங்கு சேராமல் தற்காத்துக் கொள்வர். ஆனால், லஞ்சம் பெற்றுக்கொண்டு தரமற்ற 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட சூரப்பா மறுத்துவருகிறார்.

எனவே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் மீது லஞ்சம் பெற்றுள்ளதாக கூறி தனியார் பொறியியல் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details