அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் ஷீலா ராணி சுங்கத் ஆகியோர் அடங்கிய தேடல் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்றது. ஆன்லைன் மூலம் 160 பேராசிரியர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அதிலிருந்து 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களாக தேடல் குழு இறுதி செய்துள்ளது.
துணைவேந்தர் நேர்காணல்
அவர்களுக்கான நேர்காணல் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் தேடல் குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே துணைவேந்தர் பதவியில் இருந்து கொண்டே விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.