சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இல்லத்தில் பணிபுரியும் உதவியாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பேராசிரியர்களும் ஊழியர்களும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இல்ல ஊழியருக்கு கரோனா!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இல்ல ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பேராசிரியர்களும் ஊழியர்களும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இது குறித்து சென்னை மாநகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது, 'அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் குடியிருப்பு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது. அவரது இல்லத்தில் உதவியாளராக பணியாற்றும் ஒருவருக்கும், அவரின் மகளுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கரோனாவால் பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை செய்தபோது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வீட்டில் பணிபுரிவதாகத் தெரிவித்தார். இதனை அடுத்து துணைவேந்தர் சூரப்பா, அவரது குடும்பத்தினர், ஊழியர்களுக்கு மாநகராட்சி சார்பில் கரோனா பரிசோதனை செய்துள்ளோம். அதன் முடிவுகள் தெரிந்த பின்னர்தான் நோய்த் தொற்று உள்ளதா என கூறமுடியும்' என கூறினார்.
இதையும் படிங்க... மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த 111 பேருக்கு கரோனா