அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இன்று மாலை அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார்.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் துணைவேந்தர் சூரப்பா - அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்லும் துணைவேந்தர் சூரப்பா
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, அரசு முறைப் பயணமாக இன்று மாலை அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார்.
anna university vc surappa visit america
13 நாட்கள் மேற்கொள்ளப்படும் இந்த சுற்றுப்பயணத்தில் அவர் அண்ணா பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்களை சந்தித்து பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக சில கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளர்ச்சிக்கு நிதி உதவி பெறுவது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான உதவிகளை கோருதல், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான திட்டங்களை செயல்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக சூரப்பா அமெரிக்கா செல்லவுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் தகவல் தெரிவித்துள்ளது.