அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அரசுக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக, அவரது மகளுக்கு முறைகேடாக பல்கலைக்கழகத்தில் பணி வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில், சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஆணையம் ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் சூரப்பா மீதான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி தணிகை குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.