இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் கல்விக் கட்டணத்துடன், ஆய்வகப் பயன்பாடு கட்டணம், நூலகப் பயன்பாட்டிற்கான கட்டணம், கல்லூரி வளர்ச்சிக் கட்டணம் உள்ளிட்டவற்றை முழுமையாகச் செலுத்த வேண்டும். இதற்குள் கட்டணம் கட்ட தவறுபவர்கள் 31ஆம் தேதிமுதல் செப்டம்பர் 2ஆம் தேதிவரை 200 ரூபாய் அபராதத்துடனும், செப்டம்பர் 3 முதல் 5ஆம் தேதிவரை 700 ரூபாய் அபராதத் தொகையுடன் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒருவேளை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தத் தவறினால் அந்த மாணவர்கள் தங்களுடைய படிப்பைத் தொடர விரும்பவில்லை என்று கருதப்பட்டு அவர்களின் பெயர் கல்லூரியிலிருந்து செப்டம்பர் 7ஆம் தேதி அன்று நிரந்தரமாக நீக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. இது குறித்து மாணவர்களிடம் கேட்கையில், “கடந்த 4 மாத காலமாக கல்லூரிகள் மூடப்பட்டு தற்போதுதான் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.