தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 6 பேருக்கு "நல்லாசிரியர் விருது"! - நல்லாசிரியர் விருது

சென்னை:  அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய ஆறு பேராசிரியர்களுக்கு, "நல்லாசிரியர் விருது" வழங்கப்பட்டது.

பேராசிரியர்கள்

By

Published : Sep 5, 2019, 11:07 PM IST

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி தொழில்நுட்ப கல்லூரியில் தொழில் மேம்பாடு பரிமாற்றம் மையம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்த ஆசிரியர் தின விழாவில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கிய வேல்ராஜ், ருக்மணி, ராமகிருஷ்ணன், உதயகுமார், மாசிலாமணி, நடராஜன் ஆகிய ஆறு பேராசிரியர்களுக்கு "நல்லாசிரியர் விருது" வழங்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 6 பேருக்கு "நல்லாசிரியர் விருது"

இதில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பேரன் சுப்ரமணியம் ஷர்மா, மத்திய அரசின் முன்னாள் செயலாளர் கேசவ் தேசிராஜூ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேராசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details