தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலை. பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு - semester exam result

அண்ணா பல்கலைக்கழகம் இளநிலை, முதுநிலை பருவத் தேர்வு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 27) வெளியிட்டுள்ளது.

Anna university
அண்ணா பல்கலைக்கழகம்

By

Published : Aug 27, 2021, 9:53 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்புப் பெற்று பொறியியல் கல்லூரிகளில் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் நடைபெற வேண்டிய இளநிலை, முதுநிலை தேர்வுகள் கரோனா காரணமாக பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமாக நடைபெற்ற இந்தத் தேர்வில், மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

ஆட்சி மாறிய பின் உயர் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பொன்முடி, "மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அவர்கள் தோல்வியடைந்ததாகக் கருதப்படமாட்டார்கள். மாணவர்களின் நலன் சார்ந்த முடிவு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இளநிலை, முதுநிலை பருவத் தேர்வு முடிவுகள்

இதைத் தொடர்ந்து ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற வேண்டிய பருவத் தேர்வு ஜூன்-ஜூலையில் நடைபெற்றது. இந்நிலையில், இந்த இரண்டு தேர்வு முடிவுகளும் இன்று (ஆகஸ்ட் 27) காலை வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்கள் www.coe1.annauniv.edu, www.coe2.annauniv.edu என்ற இணையதளத்தில் பதிவு எண்ணை உள்ளீடு செய்து முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கெமிஸ்டிரிக்கு குட் பை சொன்ன பொறியியல் சேர்க்கை

ABOUT THE AUTHOR

...view details