தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறுத்தேர்வு அட்டவணையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு நடைபெறும் தேதிகள் அடங்கிய கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

anna university
anna university

By

Published : Jun 10, 2021, 5:37 PM IST

கரோனா தொற்று காரணமாகப் பொறியியல் படிப்புகளுக்கான 2020ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் பருவத் தேர்வுகள், 2021ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. அதன் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியானது. அதில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சிப்பெறவில்லை.

மேலும், அந்தத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததை தாெடர்ந்து மறுதேர்வு நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மறுத்தேர்வு நடத்தப்படும் கால அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதில், ஏற்கனவே கட்டணம் செலுத்திய மாணவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனவும், புதிதாக தேர்வு எழுது விரும்பும் மாணவர்கள் கட்டணம் செலுத்தி தேர்வு எழுதலாம் என அறிவித்தார்.

இந்த நிலையில், மறுதேர்வு, 2021ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாத பருவத்தேர்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

இந்த அட்டவணையில், தேர்வுகள் மூன்று மணி நேரம் பேனா, காகித முறையில் நடைப்பெறும். ஆப்லைனில் வீட்டிலிருந்து தேர்வு எழுத மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். தேர்வு காலை, மதியம் என 2 பிரிவுகளாக 3 மணி நேரம் நடத்தப்படும். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்வுகள் இருக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மறுதேர்வுக்கான கால அட்டவணையை https://aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில், ஜூன் 21ஆம் தேதி முதல் தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை, மதியம் இரு வேளைகளிலும் தேர்வுகள் நடைபெற உள்ளன. மேலும் அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜூலை 17ஆம் தேதி முதல், தேர்வுகள் தொடங்க உள்ளன. இதுகுறித்த தேர்வுக்கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details